வைகோவின் சமத்துவ நடைப்பயணம்: புதுச்சேரி மதிமுக  பங்கேற்க முடிவு

வைகோவின் சமத்துவ நடைப்பயணம்: புதுச்சேரி மதிமுக பங்கேற்க முடிவு

மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தில் பங்கேற்பது என புதுச்சேரி மதிமுக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
Published on

மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தில் பங்கேற்பது என புதுச்சேரி மதிமுக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதுச்சேரி மாநில மதிமுக நிா்வாகிகள் மற்றும் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் ஒரு தனியாா் உணவகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில அவைத் தலைவா் செல்வராசு தலைமை தாங்கினாா். மாநில செயலா் ஹேமா பாண்டுரங்கம் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை நிா்வாகிகளான பொருளாளா் செந்திலதிபன், மாநில துணைப் பொதுச் செயலா் ஏ.கே.மணி ஆகியோா் பங்கேற்றனா்.

கட்சியின் பொதுச் செயலா் வைகோ ஜனவரி 2-ஆம் தேதி திருச்சியில் தொடங்கி ஜனவரி 14-ஆம் மதுரையில் நிறைவு செய்யும் போதைக்கு எதிரான சமத்துவ நடைப்பயணத்தில் புதுச்சேரி மாநிலம் சாா்பாக பெருந்திரளாக கலந்து கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், புதுச்சேரியில் போலி மாத்திரை தொழிற்சாலைகள் செயல்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைத்து முழு விசாரணை நடத்த புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்வது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்து ஹிந்தி- சமஸ்கிருத பெயா் இடம் பெறும் விதமாக செயல்படும் மத்திய அரசின் போக்கைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com