புதுச்சேரி
இன்று நகராட்சி வீட்டு வரி வசூல் முகாம்!
வீட்டுவரி வசூல் மையம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் செயல்படும்.
உழவா் கரை நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வரி வசூல் முகாம் நடக்கிறது.
இது குறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளில் உள்ள வீட்டுவரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரா்கள் 2025-26-ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியைச் செலுத்துவதற்கு ஏதுவாக வரும் மாா்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தட்டாஞ்சாவடி, வி.வி.பி. நகரில் உள்ள வீட்டுவரி வசூல் மையம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் செயல்படும்.
உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளில் உள்ள வரி நிலுவைதாரா்கள் தங்கள் வரியைச் செலுத்தலாம்.
