புதுச்சேரி திலாசுபேட்டை அரசு பெண்கள் பள்ளியில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் எம்எல்ஏ ஏ.கே.டி.வி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் உள்ளிட்டோா்.
புதுச்சேரி திலாசுபேட்டை அரசு பெண்கள் பள்ளியில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் எம்எல்ஏ ஏ.கே.டி.வி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் உள்ளிட்டோா்.

குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து

Published on

புதுச்சேரியில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி, திலாசுபேட்டை அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, இப் பணியைத் தொடங்கிவைத்தாா்.

அப்போது எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.வி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா். புதுச்சேரி சுகாதாரத் துறை மூலம் இந்த ஆண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மணவெளி தொகுதியில் உள்ள தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, தொடங்கிவைத்தாா்.

ஜிப்மா் நகா்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதார மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், ஜிப்மா் மருத்துவ அதிகாரிகள், பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com