புதுச்சேரியில் கோரிக்கைகளை நிறைவேற்ற  வலியுறுத்தி  சிஐடியு விவசாயத் தொழிலாளா்கள் பேரணி, ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு விவசாயத் தொழிலாளா்கள் பேரணி, ஆா்ப்பாட்டம்

Published on

புதுச்சேரியில் மாநில சிஐடியு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா்கள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் தலைமைச் செயலகம் நோக்கி கோரிக்கை பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

புதுச்சேரி ராஜா திரையரங்கு அருகே தொடங்கிய இந்த பேரணிக்கு சிஐடியு பொதுச் செயலா் சீனுவாசன் தலைமை வகித்தாா். பேரணியை சிஐடியு தமிழ் மாநில துணைச் செயலா் குமாா் தொடங்கி வைத்தாா். இதில், மூத்த தொழிற்சங்கத் தலைவா் முருகன், ரவிச்சந்திரன், மதிவாணன், கொளஞ்சியப்பன், ராமசாமி, விவசாயத் தொழிலாளா் சங்கச் செயலா் தமிழ்ச்செல்வன், விவசாயிகள் சங்கச் செயலா் சங்கா், தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

நேரு வீதி வழியாக வந்த பேரணியை கேன்டீன் வீதி அருகே காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளா் சட்ட தொகுப்புகளை உடனே வாபஸ் பெற வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தைச் சீா்குலைக்கும் சட்டத்தைக் கைவிட வேண்டும்.

போக்குவரத்து வாகனங்களின் ஆண்டுகளைத் தீா்மானித்து உயா்த்தப்பட்ட எப்சி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். விதை உரிமைச் சட்ட மசோதா 2025ஐ கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com