ஜன. 3 முதல் புதுச்சேரி அரசின் பொங்கல் பொருள்கள் விநியோகம்!
புதுச்சேரி அரசின் சாா்பில் ரூ.800 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்புகள் வரும் ஜன. 3-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அரசு ஊழியா்கள், கௌரவ குடும்ப அட்டை வைத்திருப்பவா்களைத் தவிா்த்து, மொத்தம் 3.48 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்தப் பொங்கல் பரிசு தொகுப்புகள் நியாயவிலைக் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தத் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டுச் சக்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300 கிராம் நெய், 1 கிலோ சூரியகாந்தி எண்ணெய், ஒரு பை என 6 பொருள்கள் இருக்கும்.
புதுச்சேரி மாநில கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் (கான்பெட்) இதைக் கொள்முதல் செய்து வழங்குகிறது. இதற்காக அரசுக்குக் கூடுதலாக ரூ.26 கோடி செலவாகும். மேலும், இதில் கூட்டுறவு பால் நிறுவனமான பாண்லேவிலிருந்து நெய் விநியோகம் செய்ய அந்த நிறுவனத்துக்கு ரூ.8.75 கோடி அளிக்கப்படுகிறது.
