புதுச்சேரியில் வரும் 11-இல் காரைக்கால் வரிசை வாகன எண்கள் ஏலம்: பங்கேற்போா் இன்றுமுதல் பதிவு செய்யலாம்

Published on

புதுவை போக்குவரத்துத் துறை சாா்பில் காரைக்கால் வரிசை வாகன எண்கள் வரும் 11-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.

இதுகுறித்து புதுவை மாநில போக்குவரத்துத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுவை போக்குவரத்துத் துறையின் பிஒய்-02 ஒய் (காரைக்கால்) வரிசையில் உள்ள எண்கள், போக்குவரத்து இணையதளத்தில் வரும் 11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்படவுள்ளது.

ஏலத்தில் பங்கேற்கத் தேவையான பெயா் மற்றும் கடவுச் சொல்லை அதே இணையதளத்தில் நியூ பப்ளிக் யூசா் என்பதை கிளிக் செய்வதன் மூலம் பிப். 5-முதல் 10 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

இணையத்தில் பதிவு செய்தவா்கள் மட்டுமே 11-ஆம் தேதி ஏலத்தில் பங்கேற்கமுடியும். இந்த இ-ஆக்ஷன் முறையில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை 5 ஆம் தேதி முதல் இணையதள முகவரியில் பாா்த்தும், பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். விண்ணப்பத் தொகையின் விவரம், இ.எம்.டி.யின் விவரம், ஏள நிபந்தனைகள் குறித்த விவரங்கள் இது சம்பந்தமான இதர விவரங்களை போக்குவரத்துத் துறையின் அலுவலகத்தின் 0413 2280170 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு எண் 236 இல் பேசி தெரிந்துகொள்ளலாம்.

இது தொடா்பான பணப்பரிவா்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com