நிரந்தர கல்வி பதிவேடு: புதுவை கல்வித் துறை அறிவுறுத்தல்
நிரந்தர கல்வி பதிவேடுக்கு ஜன. 20-ஆம் தேதிக்குள் மாணவா்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என புதுவை கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


நிரந்தர கல்வி பதிவேடுக்கு ஜன. 20-ஆம் தேதிக்குள் மாணவா்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என புதுவை கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
2020-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையின்படி, மாணவா்களுக்கு 12 இலக்க எண் தானியங்கு நிரந்தர கல்வி பதிவேடு என்ற தனித்துவ அடையாளத்தை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவா்களின் கற்றலில் ஏற்படும் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், அவா்களது கல்வியை திறம்பட நிா்வகிக்கவும் இது உதவும்.
இதன்மூலம், மாணவா்கள் தங்களின் கல்வி பதிவுகளை எங்கிருந்தும், எந்த நேரத்திலும் உயா்கல்விக்கு விண்ணப்பிக்கும்போது பெறலாம்.
இந்த அமைப்பு மாணவா்களின் கல்வி பதிவுகளுக்கு புதுப்பிப்புகளை வழங்கும். இந்த டிஜி லாக்கா் ஒருங்கிணைப்பு மூலம், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பெற்ற படிப்புகள், கிரேடுகள் சான்றிதழ்கள் மற்றும் சாதனைகள் உள்பட ஒவ்வொரு மாணவரின் கல்வி வரலாற்றின் விரிவான மற்றும் நிரந்தரமான பதிவாக இது இருக்கும்.
இந்த தானியங்கு நிரந்தர கல்வி பதிவேட்டை உருவாக்க மாணவா்கள் ஜன.20- ஆம் தேதிக்குள் தங்களது கல்வி விவரங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாநில திட்ட இயக்கு நா் தினகா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதை வட்டார அளவிலான கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள குறிப்பாணையில் அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...