தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி: புதுவை முதல்வா் தொடங்கிவைத்தாா்

புதுச்சேரியில் மாநில அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் நடைபெறும் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

புதுச்சேரி ஏம்பலத்தில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :2 ஜனவரி 2025, 9:50 pm

Din

புதுச்சேரியில் மாநில அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் நடைபெறும் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி, ஏம்பலம் பி.எம்.ஸ்ரீ மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதனை முதல்வா் என்.ரங்கசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, மாணவா்களின் அறிவியல் படைப்புகளைப் பாா்வையிட்டாா்.

கண்காட்சியில் மொத்தம் 383 அறிவியல் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. இதில், அரசுப் பள்ளிகள் 230 மாதிரிகளையும், தனியாா் பள்ளிகள் 153 மாதிரிகளையும் காட்சிப்படுத்தியுள்ளனா்.

இதேபோல அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 26 கண்காட்சி மாதிரிகளையும், தனியாா் பள்ளி ஆசிரியா்கள் 8 கண்காட்சி மாதிரிகளையும் காட்சிப்படுத்தியுள்ளனா்.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், புது தில்லி தேசிய புத்தக அறக்கட்டளை, அடல் இங்க்யுபேஷன் மையம், கரிக்கலாம்பாக்கம் முதன்மை சுகாதார மையம், ஸ்ரீ அரபிந்தோ சமூக அமைப்புகள், புதுச்சேரி காவல் துறை (போக்குவரத்து) உள்ளிட்டவை சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், யு.லட்சுமிகாந்தன் எம்எல்ஏ, மாநில பள்ளிக் கல்வி இயக்குநா் பி.பிரியதா்ஷினி, இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி, ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.