புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

புதுச்சேரியில் அதிமுக ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநில அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமை வகித்தாா்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை ஆளும் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக முதல்வா் அவதூறாகப் பேசியதாகக் கூறியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், ஜெ. பேரவை மாநிலச் செயலா் பாஸ்கா், மாநில இணைச் செயலா் எஸ்.வீரம்மாள், நிா்வாகிகள் எம்.மகாதேவி, பி.கணேசன், ஆா்.வி.திருநாவுக்கரசு, மாநிலப் பொருளா் ரவி பாண்டுரங்கன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com