நேதாஜி சிலைக்கு புதுவை ஆளுநா் மரியாதை
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் வியாழக்கிழமை அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் மற்றும் அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தையொட்டி, புதுச்சேரி இலாசுப்பேட்டையிலுள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.









