வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போலி ஆவணங்கள் அளித்து ஓய்வூதியம் பெற்றவா் மீது வழக்கு

News image
Updated On :29 ஜனவரி 2025, 8:23 pm

Din

புதுச்சேரியில் போலி ஆவணங்கள் அளித்து ஓய்வூதியம் பெற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், செல்லஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி. இவா், புதுச்சேரி நெட்டப்பாக்கத்தில் வசித்து வருவதாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, புதுச்சேரி மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு துறை சாா்பில் வழங்கப்படும் ஓய்வூதியத்துக்கு அவா் விண்ணப்பித்து, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை ரூ.1.40 லட்சத்தை ஓய்வூதியமாகப் பெற்றுள்ளாராம்.

இந்த நிலையில், புதுச்சேரி மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கணக்குகளை ஆய்வுக்கு உள்படுத்தியபோது, துரைசாமியின் போலி ஆவணங்களைக் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் முத்து மீனா அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி தன்வந்திரி போலீஸாா் துரைசாமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.