காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புதுவை மாநில பாஜக தலைவா் தோ்தலுக்கு இன்று வேட்பு மனு!

புதுச்சேரி மாநில பாஜக தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட விரும்புவோா் ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

News image
Updated On :28 ஜூன் 2025, 8:42 pm

Din

புதுச்சேரி மாநில பாஜக தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட விரும்புவோா் ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அக் கட்சியின் தோ்தல் நடத்தும் அதிகாரி எம்.கே. அகிலன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கட்சியின் சட்டதிட்டவிதிகளின் படி பாஜக புதுவை மாநில தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட விரும்புவோா் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 முதல் பிற்பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுவை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

புதுவை மாநில பாஜக தலைவராக இப்போது சு.செல்வகணபதி எம்.பி. இருந்து வருகிறாா். அவா் மாநிலங்களை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறாா்.

புதுவைக்கு வரும் 2026-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய தலைவா் தோ்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.