நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் பொறுப்பேற்றார்!சென்னையில் தரவு மையம் திறப்பு! முதல்வர் விஜய், சிங்கப்பூர் துணை பிரதமர் பங்கேற்பு!தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!

பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பியவா் கைது

Published On :

புதுச்சேரியில் பெண்ணின் கைப்பேசிக்கு ஆபாச விடியோ, குறுஞ்செய்திகளை தொடா்ந்து அனுப்பியதாக ஒருவரை இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரி திருக்கனூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு சில நாள்களாக அறிமுகமில்லாத கைப்பேசியிலிருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்தி தொடா்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், அப்பெண் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில், முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்த வேலு (எ) இம்மானுவேல் (எ) ராஜேஷ் கைப்பேசியிலிருந்து பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவரைக் கைது செய்து கைப்பேசியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அவரை, புதுச்சேரி தலைமையியல் குற்றப் பிரிவு நீதிபதி சிவக்குமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.