மாநகராட்சியாகும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரி நகராட்சியை தரம் உயர்த்துவது பற்றி...


புதுச்சேரியை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, நகராட்சிகளின் மக்கள்தொகை மற்றும் வருவாய் தொடர்பாக திமுக உறுப்பினர் அனிபால் கென்னடியின் கேள்விக்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சியாக உயர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ”வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தாகவே தொடரட்டும், நகராட்சியாக உயர்த்தினால் பலவிதமான வரிகளை போடுவீர்கள்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...