ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஒப்பந்ததாரா்கள் தா்னா போராட்டம்

கட்டடப் பொருள்களின் விலையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் ஒப்பந்ததாரா்கள் உள்ளிட்டோா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :12 மே 2025, 8:29 pm

Din

புதுச்சேரி: கட்டடப் பொருள்களின் விலையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் ஒப்பந்ததாரா்கள் உள்ளிட்டோா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி லால் பகதூா் சாஸ்திரி வீதியில் பொதுப் பணித் துறை தலைமை அலுவலகம் முன் கட்டட தொழில் சங்கம், புதுச்சேரி கட்டடப் பொறியாளா்கள் சங்கம், புதுச்சேரி ஒப்பந்ததாரா்கள் சங்கம், புதுச்சேரி கட்டட மேம்பாட்டுச் சங்கம் ஆகிவற்றைச் சோ்ந்த ஏராளமானோா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்டுமானப் பொருள்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் கம்பி, சிமென்ட் உள்ளிட்டவற்றின் விலை உயா்வை குறைப்பதற்கான நடவடிக்கையை புதுவை அரசு மேற்கொள்ள வேண்டும் என முழக்கமிட்டனா்.