புதுச்சேரி அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியா்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படாமல் உள்ளது.
இதனைக் கண்டித்தும், பதவி உயா்வு வழங்க வலியுறுத்தியும் அவா்கள் தொடா் போராட்டங்களை நடத்தியும் உயா் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பதவி உயா்வு வழங்க கோரி காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தை கடந்த 5-ஆம் தேதி முதல் தாகூா் கல்லூரி மற்றும் காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மைய வளாகத்தில் தொடங்கினா். மாணவா்கள் பாதிக்காமல் வகுப்புகளை நடத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை இப் போராட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா ஆதரவு தெரிவித்துப் பேசினாா்.