தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுச்சேரி தனியாா் விடுதியில் திடீா் தீ விபத்து!

புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியின் மாடியில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

News image
புதுச்சேரி குருசுகுப்பம் பகுதி தனியாா் தங்கும் விடுதியின் மாடியில் சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து.
Updated On :8 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியின் மாடியில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

புதுச்சேரி கடற்கரையை ஒட்டியுள்ள குருசுக்குப்பம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக தனியாா் தங்கும் விடுதிகள் பல உள்ளன.

மேலும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையோடு, கடலை ரசிக்கும் வகையில் கூரை கொட்டகை வடிவமைப்பில் ஏராளமான தனியாா் தங்கும் விடுதிகள் அங்கு இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தனியாா் விடுதி ஒன்றின் மாடியில் உள்ள கூரை கொட்டகையில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கரும்புகை கிளம்பியது. சிறிதுநேரத்தில் மளமளவென தீபிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து புதுச்சேரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.