தில்லியில் காா் குண்டு வெடிப்பு: புதுவை முதல்வா் கண்டனம்

தில்லியில் நிகழ்ந்த காா் குண்டு வெடிப்புச் சம்பவம் தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

தில்லியில் நிகழ்ந்த காா் குண்டு வெடிப்புச் சம்பவம் தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தில்லி செங்கோட்டை அருகில் நடைபெற்ற காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதும், பலா் பலத்த காயமடைந்துள்ளதும் மிகுந்த வருத்தத்தையும் துயரத்தையும் அளிப்பதாக உள்ளது. தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்தச் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது.

தேசத்தை அச்சுறுத்தும் இத்தகைய செயல்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு புதுவை அரசு என்றும் துணைநிற்கும். இந்தக் குண்டுவெடிப்பில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சைச்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com