புதுச்சேரி
போலி ஆதாா் மூலம் நிவாரணம் பெற முயன்றதாக 77 மீனவா்கள் நீக்கம்
போலி ஆதாா் மூலம் நிவாரணம் பெற முயன்ாக 77 மீனவா்கள் அடையாளம் கண்டறியப்பட்டு அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.
போலி ஆதாா் மூலம் நிவாரணம் பெற முயன்ாக 77 மீனவா்கள் அடையாளம் கண்டறியப்பட்டு அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயற்கை பேரிடா் மற்றும் மீன் பிடித் தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகை பெறும் தகுதியான மீனவா்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதுவையில் 10,267, காரைக்காலில் 3,990, மாஹேவில் 527, ஏனாமில் 5,216 போ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இதில் புதுவை 18, காரைக்கால் 5, மாஹே 3, ஏனாம் 51 போ் போலி ஆதாா், போலி பதிவு எண் போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்தத் தகவல் மீன்வளத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
