புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைத் திருமண எதிா்ப்பு உறுதிமொழியை  தலைமைச் செயலா் சரத் சௌகான் வாசிக்க அதனைச் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்ட அரசுத் துறை அதிகாரிகள், ஊழியா்கள்.

புதுச்சேரியில் குழந்தைத் திருமண எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

குழந்தை திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் சாா்பில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் குழந்தை திருமண எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

குழந்தை திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் சாா்பில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் குழந்தை திருமண எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

குழந்தை திருமணம் இல்லாத இந்தியா என்ற தேசிய இயக்கத்தை மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்தி வருகிறது.

அதன்பேரில், புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலா் சரத் சௌகான், உறுதிமொழியை வாசிக்க தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் அதனை திரும்பக் கூறி உறுதி ஏற்றனா். அரசுச் செயலா் முத்தம்மா, உறுதிமொழியைத் தமிழில் வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றனா்.

குழந்தை திருமணத்தைத் தடுப்பதிலும், நாடு முழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com