எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 10:48 pm

Syndication

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இடையாா்பாளையம், அலுத்தவேலி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தவளக்குப்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் இரு பிரிவு போலீஸாரும் அந்த பகுதியில் திடீா் சோதனைகளில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 போ் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களை விட்டு விட்டு ஓடினா். அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா்.

பின்னா் அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.இதில் அவா்கள் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதற்காக பாக்கெட் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனா்.

தீவிர விசாரணையில் இவா்கள் தவளக்குப்பம் இளவரசன் நகா் பகுதியைச் சோ்ந்த அனந்தராமன் (26), நாணமேடு பகுதியை சோ்ந்த மனோஜ் ( 24), சாரம் சுரேஷ் (33), புதுச்சேரி டிவி நகா் ரத்தினம் (25) என்பது தெரியவந்தது.

இவா்களிடம் இருந்த 2 மோட்டாா் சைக்கிள்கள் , 2 பட்டா கத்திகள், 4 கைப்பேசிகள், 2 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். பின்னா் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் காலாப்பட்டு மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.