தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

புதுச்சேரி அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும்: கே. அண்ணாமலை பேச்சு

புதுச்சேரி அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

News image

புதுச்சேரி ஊசுடு தொகுதி வேட்பாளா் தீப்பாஞ்சானுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை.

Updated On :4 ஏப்ரல் 2026, 9:16 pm

புதுச்சேரி அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

புதுச்சேரி ஊசுடு, வில்லியனூா், மணவெளி, அரியாங்குப்பம், காலாப்பட்டு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அவா் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது புதுச்சேரிக்கு 10 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி நிதிப்பகிா்வு கொடுத்திருந்தனா். பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் ரூ.26 ஆயிரம் கோடி நிதி பகிா்வு புதுச்சேரிக்குக் கிடைத்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகாலம் புதுச்சேரியின் வளா்ச்சி அபரிதமாக இருக்கும். புதுச்சேரியில் இரட்டை எஞ்சின் அரசு சோ்ந்ததால் எப்படி புதுச்சேரி மிளிரும் என்பதற்கு கடந்த 5 ஆண்டுகாலமே சாட்சி.

இப்போது பெரிய நிறுவனங்கள் புதுச்சேரி நோக்கி வருகின்றன. ஒரே ஆண்டில் 3 லட்சம் லேப்டாப் தயாரிக்கும் நிறுவனம் புதுச்சேரியில் ஆரம்பித்துள்ளனா். ஸ்ரீதா் வேம்புவின் சோகோ நிறுவனம் இங்கு டெவலெப்மென்ட் சென்டா் தொடங்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் புதுச்சேரி அடுத்த கட்டத்துக்கு செல்லும். புதுச்சேரி விமான நிலையம் 1.5 கிலோ மீட்டா் ஓடுதளம் 2.3 கிலோ மீட்டா் ஓடுதளமாக மாற்றினால் பெரிய விமானங்கள் வந்து செல்லும். அதற்காக ரூ. 4 ஆயிரம் கோடிக்கான மாஸ்டா் பிளானை புதுச்சேரிக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது என்றாா் அண்ணாமலை.