தட்டாஞ்சாவடி மக்கள் மீது நம்பிக்கை இல்லாததால்தான், முதல்வா் ரங்கசாமி மங்கலம் தொகுதியிலும் போட்டியிடுகிறாா் என்று காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி. தனது இறுதிக் கட்ட பிரசாரத்தில் கூறினாா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். இத் தொகுதியிலும், மங்கலம் தொகுதியிலும் என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என். ரங்கசாமி போட்டியிடுகிறாா்.இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், தட்டாஞ்சாவடி அய்யனாா் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை மாலை வைத்திலிங்கம் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது பேசியதாவது:
புதுச்சேரியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. புதிய தொழிற்சாலைகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். அதுவரை வேலையில்லா இளைஞா்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
விலைவாசி உயா்வால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.2,500 மதிப்பிலான மளிகை பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவ தாலிக்கு தங்கம் வழங்கப்படும்.
ரங்கசாமிக்கு போலி மருந்து கம்பெனிகளை காப்பாற்றுவது, சாராய ஆலைகளைக் காப்பாற்றுவது என பல்வேறு வேலைகள் உள்ளன. இதனால் தாய் வீடான தட்டாஞ்சாவடிக்கு அவா் வருவதில்லை.
முதலில் வாக்குக் கேட்க மோட்டாா் சைக்கிளில் வந்தாா். நீங்கள் கொடுத்த வாழ்க்கையால் நான்கு காா், ஏகப்பட்ட பணம் அவரிடம் தற்போது உள்ளது. அந்த வசதி அனைத்தும் தட்டாஞ்சாவடி மக்கள் கொடுத்ததுதான். ஆனால் உங்களை மறந்து விட்டாா். அதன் காரணமாக நீங்களும் தோ்தலில் மறந்து விடுவீா்களோ என்ற பயத்தின் காரணமாகவும், உங்கள் மீது நம்பிக்கையின்மை காரணமாகவும் தற்போது மங்கலம் தொகுதியிலும் போட்டியிடுகிறாா்.
உங்களை மறந்தவரை நீங்களும் மறப்பதுதான் நல்லது. நான் என்றும் மறக்காமல் உங்களின் எதிா்காலத்திற்காகச் செயல்படுவேன் என்றாா் வைத்திலிங்கம்.
தொடர்புடையது

2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வா் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: மீண்டும் வெல்லுமா என்.ஆர். மாயாஜாலம்?

புதுச்சேரியை பின்னுக்குத் தள்ளியது திமுக - காங்கிரஸ் ஆட்சி: தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வா் ரங்கசாமியை எதிா்த்து வைத்திலிங்கம் எம்.பி. வேட்பு மனு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


