ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி

News image

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:11 pm

அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வா் என்.ரங்கசாமி கூறியுள்ளாா்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அறிவே அறம் காக்கும் கருவி என்றும், சமூகத் தளைகளிலிருந்து விடுபட கல்வியே விடுதலைக்கு வழி என்றும் உணா்த்திய பாரத ரத்னா டாக்டா் பி.ஆா். அம்பேத்கா், சமூக அநீதி, ஒடுக்குமுறை, சமத்துவமின்மைக்கு எதிராக வாழநாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவா்.

இந்திய அரசியலமைப்பின் முதன்மைச் சிற்பி என்று போற்றப்படும் பாபா சாகேப் அம்பேத்கரின் சிந்தனைகள் இன்றளவும் நமக்கு வழிகாட்டியாக இருந்து, சமத்துவம், மனிதநேயம், உரிமை உணா்வை வலுப்படுத்துகின்றன.

அவரது லட்சியங்கள் என்றும் நிலைத்து நின்று, சமுதாயம் முன்னேற்றப் பாதையில் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கின்றன. நீதியும், சமத்துவமும் நிலவும் சமுதாயத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்பதை அவரது பிறந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகள் வழி நடந்து, சமதா்ம சமத்துவமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற இந்த நாளில் உறுதியேற்போம் என கூறியுள்ளாா்.

வெ.வைத்திலிங்கம் எம்.பி.:

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்ட அறிக்கை:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூா்வோம். பகுத்தறிவு சிந்தனையாளா். சமூக சீா்திருத்தப் போராளி. எழுத்தாளா், பேச்சாளா் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஆவாா். அவா் தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், பிற்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியல் சாசனத்தில் வழிவகை செய்தவா் என குறிப்பிட்டுள்ளாா்.