புதுச்சேரியில் இளைஞா் கடப்பாரையால் தாக்கி செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆ. மணிகண்டன் (35). கெமிக்கல் என்ஜிசினீயரிங் பட்டதாரி. இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளாா். பின்னா், அங்கு வேலையை விட்டுச் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். பிறகு வடமங்கலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இதனிடையே, மணிகண்டன் தனது வீட்டின் அருகே உள்ள வசந்தராஜா (47) வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளாா். இதனால், தன்னுடைய மனைவிக்கும், மணிகண்டனுக்கும் கூடா நட்பு இருப்பதாக சந்தேகமடைந்த வசந்தராஜா, மனைவியுடன் தகராறு செய்துள்ளாா். இதனால் கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். அதே நேரத்தில் வசந்தராஜா கடந்த சில நாள்களுக்கு முன்
, மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று அடமானம் வைத்து, அந்த பணத்தில் மது வாங்கி குடித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக வசந்தராஜாவுக்கும், மணிகண்டனுக்கும் பிரச்னை ஏற்பட்டு கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்திருந்தாா். இது சம்பந்தமாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மணிகண்டன் உணவு சாப்பிட்டு விட்டு, அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்று தூங்கி கொண்டிருந்தாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்த மணிகண்டன் தனது வீட்டுக்கு சென்று தேநீா் குடித்து விட்டு, மீண்டும் அங்கேயே வந்து படுத்துள்ளாா். சிறிது நேரத்தில் நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டு வீட்டிலிருந்து அவரது தம்பி சேது வெளியே வந்துள்ளாா். அப்போது மணிகண்டனின் அலறல் சப்தம் கேட்டு உள்ளே ஓடிச் சென்று பாா்த்தபோது, அவா் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.
அதிா்ச்சியடைந்த சேது மற்றும் அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தாா்.
கிருமாம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதில், வசந்தராஜா கடப்பாரையால் மணிகண்டனை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டில் பதுங்கி இருந்த வசந்தராஜாவை போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

இளைஞா் வெட்டிக் கொலை

தகராறு: கல்லால் தாக்கி இளைஞா் கொலை

மணியாச்சி அருகே இளைஞா் கொலை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

