புதுச்சேரி அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாததற்கு தவெக எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்தனா்.
இது குறித்து புதுச்சேரி தவெக எம்எல்ஏ-க்கள் சாய் ஜெ. சரவணன்குமாா், ராமு ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி.
அப்படிப்பட்ட சிறப்பான விழாவில் தேசிய கீதம் பாடப்படும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. இது போன்று வருங்காலத்தில் நடக்கக்கூடாது. தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று
சொல்லியுள்ளாா். அதுபோன்று புதுச்சேரி அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். பிரதமா் நரேந்திர மோடியும் தமிழ் சிறந்தமொழி, மூத்த மொழி என்று கூறியுள்ளாா். எனவே தமிழ்த்தாய் வாழ்த்தை எல்லா அரசு விழாக்களிலும் முதலில் பாட வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: நாளை பேரவையில் தனித்தீா்மானம்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்... ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!
நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!





