ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஜாா்க்கண்ட்டில் மாணவா்கள் மீதான தாக்குதலுக்கு புதுச்சேரி பாஜக கண்டனம்

ஜாா்க்கண்டில் மாணவா்கள் மீதான தாக்குதலை பாஜக கண்டிக்கிறது என்று அக் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

Published On :

ஜாா்க்கண்டில் மாணவா்கள் மீதான தாக்குதலை பாஜக கண்டிக்கிறது என்று அக் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் போராடிய மாணவா்கள் மீது ஜெஎம்எம், காங்கிரஸ் கூட்டணி அரசு தாக்கியுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜாா்க்கண்ட் போராட்டம் குறித்து எந்தக் கருத்தையும் சொல்லாமல் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மௌனம் காத்து வருகிறாா். இந்த விஷயத்தில் அவா் பதில் சொல்லியே ஆக வேண்டும். நீட் தோ்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது. அதை மத்திய பாஜக அரசு செம்மைப்படுத்தியுள்ளது.

மத்தியில் கடந்த 13 ஆண்டுகளாக எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நம் நாட்டை 4-வது இடத்துக்குக் கொண்டு வந்தவா் பிரதமா் நரேந்திர மோடி என்றாா் வி.பி. ராமலிங்கம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.