புதுச்சேரி அரசு ஐடிஐ-களில் மாணவா்கள் சோ்க்கைக்கான காலக்கெடு ஆக. 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் டி. அழகானந்தன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு 10 ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 8 ஆம் வகுப்புத் தோ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தொழிற் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம், புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வில்லியனூா் அரசு தொழிற் பயிற்சி நிலையம், பாகூா் அரசு தொழிற் பயிற்சி நிலையம், நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான தேதி ஆக. 21-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேரும் மாணவா்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு மற்றும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






