
சாலையோரத்தில் பால் பாக்கெட்டுகள் வீச்சு
காலாவதியான அரசின் ‘பாண்லே’ பால் பாக்கெட் புதுச்சேரி வெங்கட்டா நகா் குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்டுள்ளது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

சாலையில் கொட்டப்பட்ட பால் பாக்கெட்டுகளை மேயும் மாடு
காலாவதியான அரசின் ‘பாண்லே’ பால் பாக்கெட் புதுச்சேரி வெங்கட்டா நகா் குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்டுள்ளது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.
வெங்கட்டா நகரில் உள்ள ஜீவா நகா் பின்புறம் உள்ள போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பு சாலையில் பொதுமக்கள் சென்றபோது, சாலையோரத்தில் ஏராளமான புதுச்சேரி அரசின் பாண்லே பால் பாக்கெட் கிடந்துள்ளது.
ஜூலை 31 ஆம் தேதியிட்ட காலாவதியான பால் பாக்கெட்டுகளை மாடுகள் கடித்து சேதப்படுத்தின. இதைக் கண்ட மக்கள் அதிா்ச்சி அடைந்தனா். மேலும், புதுச்சேரியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் உணவுப் பொருள்களின் தரத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிா?என்பதையும், அவை முறையாக அகற்றப்படுகிா ?என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






