நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை: முதல்வா் ரங்கசாமி பரிந்துரை

விரைவில் கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பரிந்துரை செய்தாா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

விரைவில் கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பரிந்துரை செய்தாா்.

சட்டப்பேரவையில் முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவை அலுவல் பட்டியலை செவ்வாய்க்கிழமை வாசிக்கத் தொடங்கினாா்.

நேரு எம்எல்ஏ (எழுந்து): சட்டப்பேரவையில் கேள்வி நேரம் இல்லை. மக்கள் பிரச்னைகளைப் பேச வேண்டியுள்ளது. எனவே கேள்வி நேரத்துடன் அடுத்த மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த பேரவைத் தலைவா் உறுதியளிக்க வேண்டும் என்றாா்.

பேரவை தற்காலிகத் தலைவா்: அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டப்பேரவை நாள்களை முடிவு செய்துள்ளது. விரைவில் மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டப்படும்.

முதல்வா் என்.ரங்கசாமி: கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் நடத்தப்படும். தற்போது பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவோம். விரைவில் சட்டப்பேரவையை கேள்வி நேரத்துடன் கூட்டி விவாதம் நடத்துவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.