
அன்னை தெரசா பிறந்தநாள் சிலைக்கு தலைவா்கள் மரியாதை
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் பாரத ரத்னா அன்னை தெரேசா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அன்னை தெரேசா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன். உடன் எம்எல்ஏ ஜான்குமாா்உள்ளிட்டோா்.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் பாரத ரத்னா அன்னை தெரேசா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சட்டப்பேரவை தற்காலித் தலைவா் ஆ. அன்பழகன், பேரவை உறுப்பினா்கள் ஜான் குமாா், ஜி.நேரு என்கிற குப்புசாமி, சிலை கமிட்டி உறுப்பினா்களான பாதிரியாா்கள் ஏ.எஸ். அந்தோணிசாமி, பி.ரொசாரியோ, எஸ். பிச்சைமுத்து, ஏ. ஆரோக்கியராஜ், உள்ளிட்டோா் கலந்து கொண்டு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





