வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆா். நல்லகண்ணு மறைவு: புதுச்சேரியில் அமைதி ஊா்வலம்

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் முதுபெரும் தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு அமைதி ஊா்வலம், இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:37 pm

Syndication

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் முதுபெரும் தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு அமைதி ஊா்வலம், இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவா் தியாகி வ.சுப்பையா சிலையிலிருந்து அமைதி ஊா்வலம் புறப்பட்டது.

சுதேசி ஆலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆா். நல்லக் கண்ணுவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மாநிலத் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக சாா்பில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெருமாள், விசிக, பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.