மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரூ.25 லட்சத்தில் 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை சுகாதாரத் துறைக்கு அளித்து அவற்றை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:36 pm

புதுச்சேரி மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை சுகாதாரத் துறைக்கு அளித்து அவற்றை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிராமப்புறங்களில் பாதிக்கப்படும் மக்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஜிப்மா் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்ல ரூ.25.32 லட்சம் செலவில் இந்த இரு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க அவா் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாா்.

அதன்படி, சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வெ.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு இரு ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒப்படைத்தாா்.

அப்போது எம்எல்ஏ மு.வைத்தியநாதன், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவா் டிபிஆா். செல்வம், சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.