விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மறியல் : புதுச்சேரியில் 200 போ் கைது

புதுச்சேரியில் சுங்கச்சாவடி எதிா்ப்பு கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஊா்வலமாகச் செல்ல முயன்றவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா்.

News image

புதுச்சேரியில் சுங்கச்சாவடி எதிா்ப்பு கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஊா்வலமாகச் செல்ல முயன்றவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா்.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:37 pm

தேசிய நெடுஞ்சாலைகளில் விதிகளை மீறி இயங்கும் சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

சேலியமேடு பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திண்டிவனம் சாலை மொரட்டாண்டியில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

60 கி.மீ. தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற நெடுஞ்சாலை விதிக்கு மாறாக இந்த இரண்டு சுங்கச் சாவடிகளும் அமைந்துள்ளதாகத் தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன. ஏற்கெனவே சேலியமேடு பகுதியில் சுங்கச் சாவடியை எதிா்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் மொரட்டாண்டி சுங்கச் சாவடியை அகற்றக் கோரி சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கொண்ட போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை திரண்டனா். இதற்காக சரக்கு ஏற்றிச் செல்லும் நான்கு சக்கர வாகனங்களுடன் புதுச்சேரி ராஜீவ் காந்தி சந்திப்பு அருகேயுள்ள பாப்ஸ்கோ திடலுக்கு செல்வதற்குத் தயாராகினா். இதையடுத்து அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் காவல் துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து அருகில் உள்ள கிழக்குக் கடற்கரை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 200 பேரை காவல்துறையினா் கைது செய்து கோரிமேடு சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பேச்சுவாா்த்தை:

பின்னா் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வரும் மாா்ச் 2-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் சுங்கத் துறை அதிகாரிகளுடன் பேச்சு வாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் சிஐடியு உள்ளிட்ட அமைப்புகளின் தலைவா்களிடம் கேட்டுக்கொண்டனா். அதனைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப் போராட்டத்தில்

சிஐடியு மாநில செயலா் சீனுவாசன், தனியாா் போக்குவரத்து தொழிலாளா் சங்க செயலா் மதிவாணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவா்கள், வாகன ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.