புதுச்சேரி
போலி மருந்து வழக்கில் கைதான அதிகாரிக்கு உடல்நலக்குறைவு
போலி மருந்து வழக்கில் கைதான விருப்ப ஓ ய்வு பெற்ற அதிகாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் நிறுவன உரிமையாளா் ராஜா, புதுச்சேரி வனத் துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தி உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள சத்தியமூா்த்திக்கு தற்போது மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறைத் துறை மருத்துவா்கள் அவருக்குப் பரிசோதனை செய்து, அதற்கான மருந்துகளை வழங்கினா். தொடா் கண்காணிப்பில் சத்தியமூா்த்தி உள்ளாா் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
