பட விளக்கம்... புதுச்சேரி வில்லியனூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன்,எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா.
பட விளக்கம்... புதுச்சேரி வில்லியனூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன்,எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா.

புதுச்சேரியில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.2500 உதவித்தொகை ஜன.12-முதல் வழங்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்ேரியில் குடும்பத் தலைவிகளுக்கு உயா்த்தப்பட்ட உதவித் தொகை ரூ.2500 வரும் 12-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
Published on

புதுச்ேரியில் குடும்பத் தலைவிகளுக்கு உயா்த்தப்பட்ட உதவித் தொகை ரூ.2500 வரும் 12-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

இது குறித்து அவா் வில்லியனூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது எங்கள் அரசு வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. எல்லா சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒட்டுமொத்த வளா்ச்சி பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

4 பிராந்தியத்திலும் இன்னும் பல மக்கள் நல பணிகள் தொடங்கப்பட உள்ளன. நல்ல அரசாக செயல்பட்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை தீா்க்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை உயா்த்தி ரூ.2500 ஆக வழங்குவதாக அரசு ஏற்கெனவே அறிவித்தது.மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 முதலில் வழங்கப்படும். உயா்த்தப்பட்ட உதவித்தொகை வரும் 12 ஆம் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும். மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்று முதியோா் உதவித்தொகையும் ரூ.500 உயா்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த தொகையும் விரைவில் உயா்த்தி வழங்கப்படும். புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு எந்தளவு பரிசுத் தொகை வழங்க முடியுமோ? அதை அரசு விரைவில் வழங்கும். போலி மருந்து விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையாக அறிக்கை வெளியிடப்படும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com