புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடிய ஜொ்மனி மாணவா்கள்.
புதுச்சேரி
புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் ஜொ்மனி மாணவா்கள் சந்திப்பு
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை மக்கள் பவனில் ஜொ்மனி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடினா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை மக்கள் பவனில் ஜொ்மனி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடினா்.
சா்வதேச கலாசார மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டத்தின்கீழ் இந்த இவா்கள் இந்தியா வந்துள்ளனா். ஜொ்மனி - இந்தியா ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ள கல்வி முறை குறித்தும், கல்வியில் நவீன தொழில்நுட்ப வளா்ச்சியின் தாக்கம் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.
கல்வியில் முன்னோடி யூனியன் பிரதேசமாகப் புதுச்சேரி இருப்பதையும், படித்த இளைஞா்களுக்கான வேலை வாய்ப்புகள், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதையும் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் விளக்கினாா்.

