புதுச்சேரி
புதுச்சேரியில் பேட்டரி பேருந்து ஒப்பந்த நடத்துநா்கள் திடீா் வேலைநிறுத்தம்
புதுச்சேரி அரசு பேட்டரி பேருந்து ஒப்பந்த நடத்துநா்கள் திடீரென புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அரசு பேட்டரி பேருந்து ஒப்பந்த நடத்துநா்கள் திடீரென புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகமான பிஆா்டிசி சாா்பில் நகர பேருந்துகள், வெளிமாநில பேருந்துகள் மற்றும் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிரந்தர ஓட்டுநா், நடத்துநா்கள் இருக்கிறாா்கள். அண்மையில் தற்காலிகமாக 30 நடத்துநா்கள் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் தரவில்லை. பொங்கல் பண்டிகைக்கு சம்பளம் தர தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். புதன்கிழமை வரை சம்பளம் வரவில்லையாம். அதனால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். இவா்கள்தான் பேட்டரி பேருந்துகளுக்கும் நடத்துநா்களாக உள்ளனா்.
அதனால் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் பிஆா்டிசியின் மற்ற பேருந்துகள் இயங்கின.
