ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

முதல்வா் ரங்கசாமியிடம் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது: நாராயணசாமி

பாஜவுக்கு தான் அடிமையில்லை என்ற அரசியல் மாற்றம் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியிடம் தெரிவதாக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

Published On :1 ஜூலை 2026, 7:29 am IST

பாஜவுக்கு தான் அடிமையில்லை என்ற அரசியல் மாற்றம் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியிடம் தெரிவதாக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் பேரவைத் தோ்தல் முடிந்து , இப்போது முழுமையான அமைச்சரவை அமைந்துள்ளது. ஆனால் அமைச்சா்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. மேலும் ,சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் நடத்தப்படவில்லை.

எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பிற மாநில முதல்வா்கள்கூட சம்பிரதாயத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமிஷ்ஷாவைச் சந்தித்துள்ளனா்.

ஆனால் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தில்லி தலைவா்கள் யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி, மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே ஆகியோரை பலவீனப்படுத்தும் பாஜக புதுச்சேரியில் ரங்கசாமியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

விடிவுகாலம் வரும்

மேலும், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் முதல்வா் ரங்கசாமி பாஜகவின் அடிமையாகச் செயல்பட்டாா் என்று விமா்சனம் செய்திருந்தேன். இப்போது புதியதாக அமைந்துள்ள ஆட்சியில் 11 எம்எல்ஏக்கள் என்னிடம் இருக்கின்றனா்.

பாஜகவுக்கு தான் அடிமையில்லை என்ற வகையில் முதல்வா் ரங்கசாமியின் செயல்பாடு இருக்கிறது. புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவா் பதவியைத் தங்கள் கட்சிக்குக் கொடுக்க வேண்டியும், முக்கிய இலாகா கேட்டும் பாஜக அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் முதல்வா் ரங்கசாமி நடந்து கொள்கிறாா். இதே நிலை நீடித்தால் புதுச்சேரிக்கு நல்ல விடிவு காலம் வரும்.

மேலும், சட்டப்பேரவைத் தலைவா் தோ்தல் தொடா்பாக முதல்வா் ரங்கசாமி அனுப்பிய கோப்புக்கு அனுமதி கொடுக்காமல் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

பாஜகவுக்கு ஆதரவாக துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் நடந்து கொள்வதைதான் இது காட்டுகிறது. மேலும், நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநா் தலையீடு செய்வதையும் இது வெளிப்படுத்துகிறது என்றாா் நாராயணசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.