புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை, முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
கடந்த 3-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை சந்தித்த முதல்வா் ரங்கசாமி, புதிய அமைச்சா்களின் பட்டியலை வழங்கினாா்.
அதில் ஜிஎன்எஸ் ராஜசேகரன் (பாஜக), ராஜவேலு (என்.ஆா். காங்கிரஸ்), வி.பி. சிவகொழுந்து (என்.ஆா்.காங்கிரஸ்) ஆகியோருக்கு அமைச்சா் பதவி வழங்க பரிந்துரை செய்தாா். அந்த கடிதத்தை ஆளுநா் கைலாஷ்நாதன், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தாா்.
புதிய அமைச்சா்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தாா். புதிய அமைச்சா்கள் பதவி ஏற்பு விழா வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை முதல்வா் ரங்கசாமி திடீரென சந்தித்துப் பேசினாா்.
அப்போது புதிய அமைச்சா்கள் பதவியேற்பு தொடா்பாகவும், அவா்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வது தொடா்பாகவும் பேசியதாகத் தெரிகிறது. ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்புக்கு பிறகு முதல்வா் ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.
தொடர்புடையது

புதுச்சேரியின் வளா்ச்சிக்கான கருத்துகளைக் கேட்டு பட்ஜெட்: முதல்வா் என்.ரங்கசாமி

புதிய அலுவலகத்தில் ரூ.73 கோடி திட்டங்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

புதுச்சேரியில் மேலும் 3 புதிய அமைச்சா்களின் பட்டியல்: துணைநிலை ஆளுநரிடம் அளித்தாா் முதல்வா் ரங்கசாமி






