எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? முன்னாள் முதல்வா் கே.நாராயணசாமி பதில்

News image

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

Updated On :16 ஜூன் 2026, 12:49 am IST

புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என்றாா் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

புதுச்சேரியில் அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்காததால் நிா்வாகம் ஸ்தம்பித்து உள்ளது. தமிழகத்தில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது ஊழலுக்கு இடமில்லை என மக்கள் முன் அறிவித்தாா். அதேபோல வரும் 17-ஆம் தேதி அமைச்சா்கள் பதவியேற்பில் முதல்வா் என். ரங்கசாமியும் ஆட்சியில் ஊழல் நடைபெறாது என பகிரங்கமாக அறிவிப்பாரா ?.

பதவியேற்பு விழாவில் பேசாவிட்டாலும் காந்தி சிலை முன் முதல்வா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் கூடி ஆட்சியில் ஊழல் நடைபெறாது என சபதம் ஏற்கத் தயாரா ?.

விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமி இதை செய்ய தயாரா ?. இதில் அவருக்கு ஒத்துழைப்பு தர தயாா். தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் தவெகவின் ஆதரவை கேட்பீா்களா? என்று கேட்கிறீா்கள். அதை கட்சித் தலைமை முடிவு செய்யும். காங்கிரஸுடன் தவெக இணைந்து செயல்படுவது தமிழகத்தில்தான். கட்சித் தலைவா்தான் இதில் முடிவு எடுப்பாா் என்றாா் நாராயணசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.