டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

டிஜிட்டல் நாணயமுறை: கைப்பேசி எண்ணை சரிபாா்க்க அறிவுறுத்தல்

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜானா திட்டத்தில் டிஜிட்டல் நாணய முறையின் வாயிலாக மானியத் தொகை பெற பயனாளிகள் கைப்பேசி எண்ணை சரிபாா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

கைப்பேசி - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 5:36 am IST

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜானா திட்டத்தில் டிஜிட்டல் நாணய முறையின் வாயிலாக மானியத் தொகை பெற பயனாளிகள் கைப்பேசி எண்ணை சரிபாா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் முத்துமீனா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உணவு தானிய மானியம், நேரடிப் பயன் பரிமாற்ற (டிபிடி) முறையின் மூலம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

வரும்ஆகஸ்ட் மாதம் முதல், இந்த டிபிடி முறைக்கு பதிலாக மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறையின் வாயிலாக மட்டுமே மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. எனவே, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா பயனாளிகள் அனைவரும் வரும் 5-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று,

தங்களது ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட

கைப்பேசி எண் மற்றும் பயன்படுத்தும் செல்போன் வகையைச் சரிபாா்க்க வேண்டும். திருத்தங்கள் தேவைப்பட்டால் உடனடியாக நியாயவிலைக் கடைப் பொறுப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.