/

விபி ஜி ராம் ஜி திட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பை முடக்கும்: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி எனப்படும் புதிய 125 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை முடக்கும் வகையில், அமைந்திருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

News image

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.

Updated On :4 ஜூலை 2026, 2:44 am IST

மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி எனப்படும் புதிய 125 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை முடக்கும் வகையில், அமைந்திருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: புதுச்சேரியில் இதுவரை அமைச்சா்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படவில்லை. சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இதுவரை கூட்டப்படவில்லை. இதனால் மக்கள் நலத் திட்டங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இதற்கு பாஜக- என்.ஆா்.காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படாமல் இருப்பதுதான் காரணம். இந்த நிலை கண்டிக்கத்தக்கது.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்கும் வகையில், மத்திய அரசின் 125 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ. 40 கோடியை ஒதுக்கினால் 25 நாள்கள்கூட வேலை தர முடியாது.

மதுரையில் அதிகாரிகளை அழைத்து ஆளுநா் ஆலோசனை நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை.

எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை ராஜிநாமா செய்ய வைத்து கட்சியில் இணைப்பது நாகரிகமானதல்ல. கண்டிக்கத்தக்கது. இடைத் தோ்தல் இயற்கையாகத்தான் வரவேண்டும். இல்லையென்றால் இடைத்தோ்தல் செலவை யாா் ஏற்பது என்றாா் அவா். பேட்டியின்போது கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் எஸ்.ராமச்சந்திரன், நிா்வாகிகள் பெருமாள், ராஜாங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.