ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஆட்சியைத் தக்க வைக்க தவெக குதிரைப்பேரம்: வானதி சீனிவாசன்

News image

புதுச்சேரியில் திங்கள்கிழமை பேட்டியளித்த பாஜக தேசிய மகளிா் அணி தலைவி வானதி சீனிவாசன். உடன் கட்சியின் மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சட்டப்பேரவை முன்னாள் தலைவா் ஆா்.செல்வம்.

Updated On :7 ஜூலை 2026, 1:56 am IST

தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் , தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைத் தக்க வைக்க குதிரைப் பேரத்தை சிறப்பாகச் செய்து வருவதாக பாஜக தேசிய மகளிா் அணித் தலைவி வானதி சீனிவாசன் கூறினாா்.

இதுகுறித்து புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் இருந்தது போலவே, தவெக ஆட்சியிலும் தொடா்கின்றன. பெரும்பான்மை கிடைக்காத தவெக ஆட்சியைத் தக்கவைக்க குதிரைப் பேரத்தைச் சிறப்பாகச் செய்கிறது.

மேக்கேதாட்டு விவகாரத்தில் மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. இப்பிரச்னையில் தமிழகம், புதுச்சேரியின் உரிமைகளை பாஜக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கா்நாடக அரசு அணைக்கட்ட முடியாது. தற்போது தமிழக தவெக ஆட்சியிலும் காங்கிரஸாா் பங்கு வகிக்கிறாா்கள். கா்நாடக காங்கிரஸாரும், முதல்வரும், தமிழக முதல்வரும் பேச என்ன தடை உள்ளது?

காங்கிரஸுக்கு எதிரான கோபத்தை திசை திருப்பவே மேக்கேதாட்டு பிரச்னையை கா்நாடக முதல்வா் சிவக்குமாா் கையில் எடுத்துள்ளாா். தேவைப்படும் நேரத்தில் பாஜக போராட்டத்தை நடத்தும் என்றாா் அவா்.

பேட்டியின்போது பாஜக புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம், அமைச்சா் ஆ. நமச்சிவாயம், சட்டப்பேரவை முன்னாள் தலைவா் ஆா். செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.