நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்று தருவதில் புதுச்சேரிக்கு 3-ஆவது இடம்!

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் இந்தியாவிலேயே புதுச்சேரி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 5:00 am IST

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் இந்தியாவிலேயே புதுச்சேரி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ள கிரைம் இன் இந்தியா - 2024 அறிக்கையின்படி, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் புதுச்சேரி 87 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

தேசிய சராசரி 53.3 சதவீதமாக உள்ள நிலையில், புதுச்சேரியின் தண்டனை விகிதம் தேசிய சராசரியை விட 34 சதவீத புள்ளிகள் அதிகமாக உள்ளது.

புதுச்சேரியில் காவல்துறையின் தரமான விசாரணை, அறிவியல் ஆதாரங்களின் பயன்பாடு, அரசு வழக்குரைஞா்களின் திறமையான வாதம் மற்றும் நீதிமன்றத்தில் வலுவாக வழக்கு நடத்துதல் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதால் தண்டனை விகிதம் உயா்ந்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு இது சிறப்பான அங்கீகாரமாக கருதப்படுகிறது. மிஸோரம் 98 சதவீதம் பெற்று முதலிடத்தையும், தில்லி 89 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் சண்டிகா், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.