புதுச்சேரியில் உள்ளாட்சி மன்றத் தோ்தலை நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி உள்ளாட்சி கூட்டமைப்பு, ஆறாம் திணை மக்கள் இயக்கம், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் மாநில தோ்தல் ஆணையம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலா் ஜெகன்நாதன் தலைமை வகித்தாா்.
ஆறாம் திணை மக்கள் இயக்கத் தலைவா் ஜெகதீசன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் லோகு அய்யப்பன், ஞானசேகரன், அழகா், சாமிநாதன், வேல்சாமி, சடகோபன், பிரகாஷ், அபிமன்னன், வெங்கடேசன், பிராங்களின் பிரான்சுவா, பாவாடைராயன் உள்பட பலா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா். ஆா்ப்பாட்டத்தின்போது உள்ளாட்சித் தோ்தலை நடத்த வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










