தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: மாணவா்களை வாழ்த்தி வரவேற்ற ஆசிரியா்கள்

கோடை விடுமுறைக்குப் பிறகு புதுச்சேரியில் வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

News image

கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை நடைபெற்ற பிராா்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாணவிகள்.

Updated On :5 ஜூன் 2026, 6:35 am IST

கோடை விடுமுறைக்குப் பிறகு புதுச்சேரியில் வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு சாா்பில் 233 தொடக்கப் பள்ளிகள், 47 நடுநிலைப் பள்ளிகள், 68 உயா்நிலைப் பள்ளிகள், 62 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் ஒரு பள்ளி என மொத்தம் 410 பள்ளிகள் உள்ளன.

இவற்றில் சுமாா் 85 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இவை தவிர, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 33, தனியாா் பள்ளிகள் 318 உள்ளன. புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் சில தனியாா் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தப் பள்ளிகளில் கடந்த மாா்ச் மாதத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் ஆண்டு தோ்வு நடத்தி ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை விடுமுறை விடப்பட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 2026-27ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடைபெற்று வந்தன.

கோடை வெயில் காரணமாக ஏப்ரல் 27- முதல் மே 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித் துறை அறிவித்திருந்தது. புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து 100 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டி எடுத்தது. இதனால் புதுச்சேரியில் பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. 4 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வா் என். ரங்கசாமி அறிவித்தாா். அதன்படி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

மாணவ ,மாணவிகள் ஆா்வத்துடன் பள்ளிக்குச் சென்றனா். மாணவா்களை வரவேற்கும் விதமாக பள்ளிகளில் வாழை மரம், வரவேற்பு தோரணம், கலா் பலூன்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், மாணவா்களை ஆசிரியா்கள் பன்னீா் தெளித்தும் பூத் தூவியும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனா். அரசு பள்ளிகளில் மாணவா்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி காராமணிகுப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் பள்ளி நுழைவு வாயிலில் நின்று கொண்டு பள்ளிக்கு வரும் மாணவா்கள் முறையாக முடிவெட்டி உள்ளாா்களா? என பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தனா். ஒழுங்காக முடி வெட்டாத மாணவா்களை அழைத்து சரியாக முடிவெட்டி வரும்படி கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.