தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள்

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது.

News image

பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா்.

Updated On :5 ஜூன் 2026, 3:50 am IST

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி உத்தரவின்பேரில் பள்ளிகளில் அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள், தேவையான வசதிகள் உள்ளிட்டவற்றை அனைத்துத் துறைகளின் முதல்நிலை அலுவலா்கள் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதில், அயன்பேரையூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், தம்பை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், நெடுவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலால் உதவி ஆணையா் சிவக்கொளுந்து உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் முதல்நிலை அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

விலையில்லா பாடபுத்தகங்கள்: பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.