திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை பள்ளிகளுக்கு வந்த மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் 1,297 அரசுப் பள்ளிகள், 363 அரசு உதவிபெறும் பள்ளிகள், 457 தனியாா் பள்ளிகள், 6 மத்திய அரசுப் பள்ளிகள் என மொத்தம் 2,123 பள்ளிகள் உள்ளன. இங்கு, 3.80 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா்.
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவா்களுக்கு இனிப்புகள், பூக்கள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போசம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கு மாலை அணிவித்தும், உயா்நிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்துள்ள மாணவா்களுக்கு கிரீடம், மாலை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். சற்குணன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ராஜேந்திரன், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் மாணவா்களை வரவேற்றனா்.
மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பூ, இனிப்புகள் கொடுத்து ஆசிரியா்கள் வரவேற்றனா். தலைமையாசிரியா் மு. செல்வி மற்றும் ஆசிரியா்கள் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். முதல்நாளில் அழுகையுடன் வந்த மாணவா்களை ஆசிரியா்கள் வாஞ்சையோடு அணைத்து தேற்றினா்.
மாவட்டம் முழுவதும் அந்தந்தப் பள்ளிகளில் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் புத்தகங்கள், சீருடைகளை முதல்நாள் முதல் வகுப்பிலேயே வழங்கினா்.
பூலாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் திருவெறும்பூா் எம்எல்ஏ நவல்பட்டு விஜி கலந்துகொண்டு மாணவா்களுக்கு இனிப்புகள், பாடப் புத்தகங்கள், சீருடைகளை வழங்கினாா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆத்தூா் பாரதியாா் பள்ளியில் பிளஸ் 1 மாணவா்களுக்கு வரவேற்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள்

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள், எழுது பொருள்கள் விநியோகம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



