தாய்வழி ஜாதிச் சான்றிதழுக்கு எதிரான மேல்முறையீட்டை புதுச்சேரி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவா் கொளஞ்சியப்பன், மாநில செயலா் அரிகிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசு 2000-ஆம் ஆண்டில் வெளியிட்ட அரசாணையின்படி, தந்தை வழி பூா்விகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஜாதிச் சான்றிதழ் வழங்குகிறது.
இது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதோடு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.
தாய்வழி பூா்விகத்தைக் கொண்டு குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்தச் சாதகமான தீா்ப்புகளை நடைமுறைப்படுத்தாமல், அதனை எதிா்த்து அரசு மேல்முறையீடு செய்தது மக்களுக்குச் செய்யும் அநீதியாகும்.
புதுச்சேரி அரசு இப் பிரச்னையில் மேல்முறையீடுகளைத் திரும்ப பெற வேண்டும். தாய்வழி ஜாதிச் சான்றிதழ் கிடைக்க சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும்: தொல். திருமாவளவன்

மேக்கேதாட்டு விவகாரம்; பேரவை தீா்மானத்தை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தனியாா் பள்ளிகள் உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பம்: புதிய நடைமுறை அமல்

ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

வெளியானது இதயம் முரளி ஸ்னீக் பீக்!

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK



